×

குடிநீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும்: பழநி நகராட்சி அறிவிப்பு

பழநி, நவ. 6: பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பழநி நகராட்சி சார்பில் குடிநீரின் தரத்தை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் 6 மேல்நிலை தொட்டிகள் பாலாறு-பொருந்தலாறு மற்றும் கோடைகால நீர்த்தேக்க சுத்தகரிப்பு நிலையம் பிரதான குழாய் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் அனைத்து குழாய்களில் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர் ஐ.எஸ்.ஐ தரம் உள்ளதா, 32% குளோரின் அளவு கண்டிப்பாக உள்ளதா என நகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதியை குறைந்தபட்ச குளோரின் அளவான 0.2 பி.பி.எம். இருக்குமாறு குளோரினேசன் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வயிற்றுபோக்கு, வாந்திபேதி, காய்ச்சல் போன்ற குடிநீர் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post குடிநீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும்: பழநி நகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Municipality ,Palani ,Dinakaran ,
× RELATED பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு.....