×

30 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் பணி துவக்கம்

 

கெங்கவல்லி, நவ.4: கெங்கவல்லி பேரூராட்சியில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ நல்லதம்பி துவக்கி வைத்தார்.  கெங்கவல்லி எம்எல்ஏ பொது நிதியிலிருந்து, கெங்கவல்லி பேரூராட்சி 5வது வார்டில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய், 10து வார்டில் ₹7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய், 11வது வார்டில் 12.50 லட்சம் மதிப்பீட்டின் புதிய கால்வாய் அமைக்கும் பணியை, நல்லதம்பி எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கருப்பையா, நகர செயலாளர் இளவரசு, கவுன்சிலர் காளியம்மாள், வஹிதா முஜிபுர் ரகுமான், ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post 30 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,MLA Nallathambi ,Kengavalli Municipality ,
× RELATED அரசு பள்ளிகளில் தூய்மை பணி