×

2024-ம் ஆண்டு பிப்.11-ம் தேதி பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: 2024-ம் ஆண்டு பிப்.11-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தனில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடியால் இம்ரான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இம்ரான்கான் அரசு கவிழ்க்கப்பட்டது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனை முன்னாள் பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பலன் தராத நிலையில், பாகிஸ்தான் முழுவதும் பெரும் வன்முறைகள் வெடித்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, பெட்ரோல் விலையுயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் அரசு பணத்தை முறைகேடாக செலவு செய்ததாக இம்ரான் கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பாகிஸ்தானில் அரசியல் ரீதியாகவும் குழப்பங்கள் நிலவியது.

இதையடுத்து இம்ரான் கானை அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்தார். பின்னர் அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.

இதையடுத்து தேர்தல் எப்போது நடத்தப்படும் என பலதரப்பினரிடம் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் தேர்தல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அந்நாட்டின் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு பிப்.11-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தனில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடியால் இம்ரான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இம்ரான்கான் அரசு கவிழ்க்கப்பட்டது.

The post 2024-ம் ஆண்டு பிப்.11-ம் தேதி பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan General Election ,Election Commission ,Islamabad ,Election Commission of Pakistan ,Pakistan ,Commission ,Dinakaran ,
× RELATED விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக...