×

இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு!

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 03.32 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் 121 கிமீ தொலைவில் மையம் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. தீவுகள் நிறைந்த இந்தோனேசியா நாடு, ரிங் ஆப் பயர் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு! appeared first on Dinakaran.

Tags : EARTHQUAKE ,NORTHEAST MALUGUBATAYA ,INDONESIA ,JAKARTA ,NORTHEASTERN MALUGUBATAYA ,eastern Maluku province ,northeastern Malugubhataya ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்