×

அரசு விதித்த காலக்கெடு முடிந்ததால்… பாகிஸ்தானில் இருந்து ஆப்கானியர்கள் வௌியேற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானியர்கள் நேற்று வௌியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு பயந்து ஏரளமான ஆப்கானியர்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் எந்தவித ஆவணங்களுமின்றி குடியேறினர். ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்ட அறிக்கையில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் குடியேறியதாகவும், அவர்களில் ஆறு லட்சம் பேர் தலிபான் ஆட்சிக்கு அஞ்சி ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறியவர்கள் பிரச்னை குறித்து இருநாடுகளும் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) வௌியேற வேண்டும். இல்லையெனில் நவம்பர் 1(நேற்று) முதல் கட்டாயம் வௌியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வௌியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நேற்று வௌியேற்றப்பட்டனர். கராச்சி துறைமுக நகரம், ராவல்பிண்டியின் காரிசன், ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள தென்மேற்கு பலுசிஸ்தான், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இதை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

The post அரசு விதித்த காலக்கெடு முடிந்ததால்… பாகிஸ்தானில் இருந்து ஆப்கானியர்கள் வௌியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Afghans ,Pakistan ,Islamabad ,Taliban ,Afghanistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா