×

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம்

துபாய்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8வது இடத்தில் இருந்து 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 74 ரன்கள், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் என 3 அரைசதங்களுடன் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பெறும் பட்சத்தில் அந்த அணியில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

பாகிஸ்தான் அணி அடுத்து நவ.4ம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் பாகிஸ்தான் அணி ஈவாரு எதிர்கொள்கிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாம் பேட்ஸ்மேன்கள் 818 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் அந்த அணியின் வெக்கபந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி 673 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் பேட்டிங், பவுலிங் என இரு வகையிலும் பாகிஸ்தான் அணி வீரர்களே முதலிடத்தில் உள்ளனர்.

The post ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Babar Azam ,ICC ,Dubai ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 6 பயங்கரவாதிகள் பலி