×

தேனியில் நகராட்சி காலியிடத்தை விளையாட்டு மைதானத்திற்கு வழங்க கலெக்டரிடம் கோரிக்கை

தேனி, நவ. 1: தேனி நகராட்சி 29 வது வார்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தை இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வழங்க வேண்டும் என கலெக்டரிடம் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமையில் வாலிபர்கள் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: தேனி நகராட்சிக்குட்பட்ட 29 வதுவார்டில் மின்மயானம் செல்லும் வழியில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றியும் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு குடியிருக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாத நிலை உள்ளது. இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் வேறு உபயோகத்திற்கு எடுக்கும் வரை இப்பகுதி இளைஞர்கள் உடல்நலனை மேம்படுத்த விளையாட்டு மைதானமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post தேனியில் நகராட்சி காலியிடத்தை விளையாட்டு மைதானத்திற்கு வழங்க கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Theni ,Municipal Municipality 29th Ward Municipal Vacancy ,Dinakaran ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு