×

சனாதனம் தொடர்பான கருத்தை எதிர்த்து வழக்கு ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்

சென்னை: சனாதனம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்.பி.ஆ.ராசா ஆகியோர் மீது இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் அவகாசம் கோரினார். உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மனுதார் முழு ஆதாரங்களை தாக்கல் செய்ய தவறியதால் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஆதாரங்களை கேட்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. தங்கள் மீது குற்றம் சாட்டிய மனுதாரர்கள் தான் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை வைத்து, பாஜவினர் டிவிட்டரில் தனி விசாரணையை நடத்துகின்றனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில் பிரதான மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ராசா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சனாதனம் தொடர்பான கருத்தை எதிர்த்து வழக்கு ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Sanathanam ,Minister ,Udayanidhi ,Chennai ,Hindu Front ,Ministers ,Udhayanidhi Stalin ,Shekhar Babu ,DMK ,M.P.A.Rasa ,Udhayanidhi ,
× RELATED நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது...