×

கொல்கத்தாவில் நாளை பாகிஸ்தான்-வங்கதேசம் மோதல்

கொல்கத்தா: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் 31வது லீக் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் மோதுகின்றன. பாகிஸ்தான் 6 போட்டியில் 2ல் மட்டுமே வென்றுள்ள நிலையில் மீதமுள்ள 3 போட்டியிலும் சிறந்த வெற்றியை பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி,தோல்வியை பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல் வங்கதேசம் 6 போட்டியில் 5ல் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப முயலும். இரு அணிகளும் இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 33ல் பாகிஸ்தான், 5ல் வங்கதேசம் வென்றுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3-2 என வங்கதேசம் முன்னிலையில் உள்ளது. உலக கோப்பையில் 2 முறை நேருக்கு நேர் சந்தித்ததில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

The post கொல்கத்தாவில் நாளை பாகிஸ்தான்-வங்கதேசம் மோதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Bangladesh ,Kolkata ,World Cup ,Kolkata Eden Gardens ,Dinakaran ,
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை