×

பேட்மின்டன்; 2வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஜோடி

பாங்காக்: தாய்லாந்து பேட்மின்டனின் 2வது சுற்றுக்கு சதிஷ்குமார், ஆத்யா ஜோடி முன்னேறியது. தாய்லாந்தில் சர்வதேச பேட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா வரியாத் ஜோடி, தாய்லாந்தின் மீசாய், பங்பா ஜோடியை எதிர் கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-17, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் இந்தோனேஷியாவின் ரினோவ், பிதா மென்ட் ஜோடியிடம் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி 12-21, 16-21 என்ற செட்டில் தோல்வியடைந்தது. ஆண்கள் ஒற்றையருக்கான தகுதிச்சுற்று 2வது போட்டியில் இந்தியாவின் மெய்ரபா லுவாங், சக வீரர் ஷாஷ்வத் தலாலை 15-21, 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். இதில் இந்தியாவின் ‘நம்பர்-1’ வீரர் பிரனாயுடன் இன்று மோதுகிறார். தகுதிச்சுற்றில் முதல் போட்டியில் வென்ற இந்திய வீரர்கள் ஆயுஸ் ஷெட்டி, ரவி, 2வது போட்டியில் தோற்று வெளியேறினர்.

The post பேட்மின்டன்; 2வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஜோடி appeared first on Dinakaran.

Tags : BANGKOK ,Satish Kumar ,Adhya ,Thailand ,International Badminton Series ,India ,Satish Kumar Karunakaran ,Adhya Variat ,Meisai ,Bangpa ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு