×

தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஆர்.காளிதாஸ் வாண்டையார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் தஞ்சாவூர் மாவட்ட அணிக்கு (30 வயதுக்குட்பட்டவர்கள்) வீரர்கள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

The post தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur District Cricket Team ,Thanjavur ,Thanjavur district ,Thanjavur District Cricket Association ,RR Kalidas ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் வாழை இலை விலை திடீர் உயர்வு