×

மீண்டும் ஆட்சி அமைத்தால் சட்டீஸ்கரில் எல்கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி: காங்கிரஸ் வாக்குறுதி

ராய்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் பள்ளி, கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. சட்டீஸ்கரின் 90 பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜவும் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள கான்கேர் மாவட்டம் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பஸ்தார் பகுதியில் பானுபிராப்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “சட்டீஸ்கரில் கடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் ‘எல்கேஜி முதல் பிஜி’ அதாவது மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை அரசு கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி கற்று தரப்படும். ராஜீவ் காந்தி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் டெண்டு இலை சேகரிப்பாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post மீண்டும் ஆட்சி அமைத்தால் சட்டீஸ்கரில் எல்கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி: காங்கிரஸ் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : LKG ,PG ,Chhattisgarh ,Congress ,Raipur ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் பயங்கரம் மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி