×

காதலி பேச மறுத்ததால் புதுவை கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

புதுச்சேரி, அக். 28: புதுவையில் காதலி பேச மறுத்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, கொசப்பாளையம், திருமால் நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). பைனான்சியர். இவரது மகன் மிதுன்குமார் (17). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்து கல்வி பயின்று வந்தார். ரங்கசாமியின் தாயார், அவரது சொந்த ஊரான திருப்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கவே அவரை சந்திப்பதற்காக ரங்கசாமி தனது மனைவியுடன் அங்கு சென்றார்.

அப்போது மிதுன்குமார் வீட்டில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் அவரது தாயார் பலமுறை மகனுக்கு போன் செய்தும் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது உள்ளே மின்விசிறி இயங்கியதோடு, மிதுன்குமாரின் செல்போன் அழைப்பு சத்தம் கேட்டு அவர் போனை எடுக்காதது தெரியவரவே உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது மிதுன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மிதுன்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது மிதுன்குமார், சக மாணவி ஒருவரை காதலித்து வந்ததும் சில நாட்களாக அப்பெண் மிதுன்குமாரிடம் பேசாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கருதிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post காதலி பேச மறுத்ததால் புதுவை கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Puducherry ,Puduvai ,
× RELATED 3 மணிநேரம் ஆட்டோ ஓடவில்லை அனைத்து...