×

முகப் பொலிவை கூட்டும் டீடாக்ஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாகவே, டீடாக்ஸ் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படி கேள்வியுறும் டீடாக்ஸ் என்பது என்னவென்றால், உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடலை டீடாக்ஸ் செய்து கொள்வது போலவே, முகத்தையும் டீடாக்ஸ் செய்து கொள்ளலாம். இதன்மூலம், முகத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவும். மேலும், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

டீடாக்ஸ் செய்யும் முறைகள்

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக அவசியம். அதற்கு, டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுவது மிக முக்கியம். அதாவது இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும். இப்படி இரண்டு முறை க்ளன்சிங் செய்யும்போது சருமத் துளைகளுக்குள் உள்ளே சென்றிருக்கிற மேக்கப் பொருட்கள், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட லோஷன்கள், அதிகப்படியான சீபமசுரப்பு ஆகியவற்றை நீக்கும்.

சருமத்தில் தினமும் தேங்குகிற இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் எக்ஸபோலியேட் செய்வது முக்கியம். இதற்கு நல்ல ஸ்கிரப் ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி மென்மையாக சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்தால் போதுமானது.

சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேற க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். க்ளே மாஸ்க் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம் அல்லது தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும்
பளபளப்பாகவும் இருக்கும். கிரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கிரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சருமத்தை டீடாக்ஸ் செய்து பளிச்சென்று மாற்றும்.

தொகுப்பு: ரிஷி

The post முகப் பொலிவை கூட்டும் டீடாக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dr.Kumkum ,Dinakaran ,
× RELATED ஹெப்படைட்டிஸ் அலெர்ட் ப்ளீஸ்!