×

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டில் அனுமயின்றி கொடி கம்பம் அமைத்ததை அகற்றும் போது கிரேன் வாகன கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் ரெட்டி கடந்த 21ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். இதனிடையே அமர்பிரசாத் ரெட்டியை நவ.10 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்வர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

The post பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Saidapet court ,BJP ,Amar Prasad Reddy ,Chennai ,Amarprasad Reddy ,Annamalai house ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...