×

முத்துப்பேட்டை கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை,வனத்துறை, போலீசார் கூட்டு ரோந்து

*பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், வனத்துறை இணைந்து நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.முத்துப்பேட்டை அலையாத்திக்காடு. அதனை ஒட்டியுள்ள லகூன் பகுதி மற்றும் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுத்தல், கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுப்பது, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி, தலைமைக் காவலர்கள் கலைவாணன், ராஜா, சட்டம் – ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், காவலர் மணிவண்ணன், வனக்காப்பாளர் இளையராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் வனத்துறைக்கு சொந்தமான படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மீனவர்களின் படகுகளில் சோதனை செய்யப்பட்டது. மேலும் அந்நியர்கள் ஊடுறுவல், கடத்தல் சம்பவங்கள் நடந்தால் அதுகுறித்து காவல்துறை, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

The post முத்துப்பேட்டை கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை,வனத்துறை, போலீசார் கூட்டு ரோந்து appeared first on Dinakaran.

Tags : Coast Guard ,Forest Department ,Muthuppet sea ,Muthupet ,Tiruvarur district ,Muthupettai sea ,security force ,Muthupettai ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...