×

கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி .வெளியிட்ட அறிக்கை: கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த 26ம் தேதி இரு ஜே.சி.பி இயந்திரம் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சரக்குந்துகளை சிறை பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் மட்டும் வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. தொடர்ந்து ஒரே குழுவினர்தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர்.

கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச்சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kerala ,Anbumani ,Tamil Nadu government ,CHENNAI ,BAMAK ,president ,Kudalur ,JCP ,Selvapuram ,Katanchi ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை