×

நெல், பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

 

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.27: பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. திருந்திய பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் சம்பா பருவம் ஆகஸ்ட் முதல், நவம்பர் 15 வரை விதைப்பு மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்யலாம். விதைப்பு தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் பயிர் மகசூல் இழப்பு, அறுவடைக்கு பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றிற்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.

நெல் பயிருக்கான பிரீமியம் ஏக்கருக்கு ₹550.50 ஆகும். காலக்கெடு நவம்பர் 15ம்தேதி ஆகும்.அதேபோல் பருத்தி பயிருக்கான பிரீமியம் ஏக்கருக்கு ₹628.04 ஆகும். அக்டோபர் 31ம்தேதி வரை செலுத்தலாம். எனவே நெல், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு படிவம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் வட்டாரத்தில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

The post நெல், பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Munikrishnan ,Assistant Director ,Papriprettipatti ,
× RELATED கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு