×

பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது

கடலூர், அக். 27: கடலூர் பீச் ரோட்டில் ஆவின் பால் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கடைக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் அங்கிருந்த பால் பாக்கெட்டுகளை பெட்டியுடன் திருடி சென்று விட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில் ஆவின் பால் பாக்கெட்டுகளை திருடியது மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

The post பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Beach Road ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு