×

ஈரோட்டில் நாளை அறிவியல் கண்காட்சி

ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் நாளை (27ம் தேதி) ஈரோடு திண்டல் பிவிபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. 30 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 300 மாணவிகள் பங்கேற்று, 6 தலைப்புகளின் கீழ் அறிவியல் படைப்புகளை சமர்பிக்க உள்ளனர்.

The post ஈரோட்டில் நாளை அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science fair ,Erode ,Union Government ,Dinakaran ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது