×

ஆறுமுகசாமி ஆணைய வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து,  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்  விசாரித்து வந்தது.  இதன் விசாரணையை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை சென்ைன உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் அது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது,’ என அது குற்றம்சாட்டியது. ஆனால், எந்த அடிப்படையில் இந்த  ஆணையம் தனது விசாரணையில் இயற்கை நீதியை மீறியுள்ளது என கூறும்படி அப்பல்லோ மருத்துவமனைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி அப்துல்நசீல் அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து அவர் உத்தரவிட்டார்….

The post ஆறுமுகசாமி ஆணைய வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Arumukusamy Commission ,New Delhi ,Justice Arumukasamy Commission ,CM ,Jayalalithah ,Aramukasamy Commission ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி