×

பெண்ணை செங்கல்லால் தாக்கிய வாலிபர் கைது

 

உளுந்தூர்பேட்டை, அக். 23: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலனி கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் சத்யராஜ் (35), மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் இந்த கிராமத்தில் வருவோர் போவோரை திடீரென கல்லால் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இக்கிராமத்தில் காசிலிங்கம் மனைவி விமலா (50) என்ற பெண் தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சத்யராஜ் ஒரு குச்சியால் விமலாவை அடித்துள்ளார்.

ஏன் இப்படி அடிக்கிறாய் என கேட்டதற்கு ஆத்திரமடைந்த சத்யராஜ் செங்கல்லால் விமலாவின் தலையில் அடித்ததில் தலையில் படுகாயம் அடைந்த விமலா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து சத்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணை செங்கல்லால் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Munian ,Satyaraj ,Pali Pudu Colony ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது