×

மருதங்காவெளி அரசு பள்ளியில் முன்பிருந்த இடத்தில் அங்கன்வாடி கட்ட வேண்டும்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மிக முக்கிய பகுதியில் உள்ள இந்த பள்ளி சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. அதேபோன்று இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் இயங்கி வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

 

The post மருதங்காவெளி அரசு பள்ளியில் முன்பிருந்த இடத்தில் அங்கன்வாடி கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Maruthangaveli Government School ,Muthuppet ,Maruthangaveli Government Panchayat Union Middle School ,Muthupet ,
× RELATED பெருங்களூர் ஊராட்சியில் அங்கன்வாடி...