×

கமுதி பள்ளி மாணவர்கள் மாநில கபடி போட்டிக்கு தகுதி

கமுதி, அக்.21: கமுதி அருகே புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான கபடி போட்டியில், வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. கமுதி அருகே கே.எம்.கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு, முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் 19 வயதிற்குட்பட்ட இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். மாவட்ட
அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சிக்கல், உப்பூர், சாயல்குடி, பரமக்குடி, ராமேஸ்வரம், மண்டபம், உச்சிப்புளி உட்பட ஏராளமான பகுதியில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கமுதி பள்ளி மாணவர்கள் மாநில கபடி போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,kabaddi ,St. John's High School ,Dinakaran ,
× RELATED கமுதி மின்வாரிய அலுவலகத்தில் விஷபூச்சிகள் தொல்லை அதிகரிப்பு