×

மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

 

கமுதி, அக்.20: கமுதி வட்டார வளமைய அலுவலகத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டார வளமைய அலுவலகத்தில், உள்ளடங்கிய கல்வி மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமையில், கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் கவிதா, அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 17 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. 8 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் மனநல மருத்துவர் பாரதி, எலும்பு முறிவு மருத்துவர் பிரபாகரன், கண், காது மருத்துவர் ஹேமாசுந்தர், குழந்தைகள் நல மருத்துவர் நல்லசாமி, வட்டார வள மைய சிறப்பாசிரியர் முத்திருளாண்டி, தசைப் பயிற்சியாளர் முருகவள்ளி மற்றும் 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Kamudi… ,Dinakaran ,
× RELATED கிருதுமால் நதி தரைப்பாலம் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை