×

புதுக்கோட்டையில் 4 பேருக்கு டெங்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நேற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 55 பேரில், 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டெங்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 4 பேரும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். புதுகை நகரில் யாருக்கும் டெங்கு உறுதி செய்யப்படவில்லை. இதுதவிர, மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு உறுதி செய்யப்படாத 141 பேர் காய்ச்சல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் 4 பேருக்கு டெங்கு appeared first on Dinakaran.

Tags : Pudukkota Pudukkottai ,Pudukkottai district ,Pudukkota ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் 5வது சுற்றாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி