×

மறைமலைநகரில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகரில் நேற்று மாலை செங்கல்பட்டு உட்பட 4 மாவட்ட வளர்ச்சி பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது, அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. ஆய்வுகூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டார்.

சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் உள்ள ஓட்டலில் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 4 மணிக்கு மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டித்துக்கு சென்றார். அங்கு அனைத்துதுறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலந்தூர் கத்திப்பாராவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேண்ட் வாத்தியம், செண்டை மேளம், மேளதாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுபோல், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணைச்செயலாளரும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இதுபோல், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன்பு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளரும் செங்கல்பட்டு எம்எல்ஏவுமான வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் பேண்ட் வாத்தியம், செண்டை மேளம் முழங்க முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மறைமலைநகர் நகர செயலாளரும் நகராட்சிமன்ற தலைவருமான ஜெ.சண்முகம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்குழு தலைவர் பி.மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான எம்கேடி.கார்த்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.அன்புசெல்வன், கூடுவாஞ்சேரி நகரமன்ற துணை தலைவர் லோகநாதன், மறைமலைநகர் நகரமன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அருள்தேவி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் த.வினோத்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு, தாம்பரம் காவல்துறை இணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் முதல்வருக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும், தங்குமிடம் உள்ளிட்டவை குறித்து காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி, வருவாய்த்துறை, உணவு பாதுகாப்புத்துறை ஊரக வளர்ச்சித்துறை என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மறைமலைநகரில் உள்ள ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் வருகையை முன்னிட்டு மறைமலைநகர் சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாள் ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மறைமலைநகரில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Karamalayanagar ,Chengalpattu ,Karamalainagar ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு