![]()
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். ஆலையில் புதிதாக தயாரித்த வெடியை பரிசோதனை செய்து பார்த்தபோது கடையில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டது. பட்டாசு விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாசபெருமாள் ஆய்வு நடத்தி வருகிறார். அழகாபுரியைச் சேர்ந்த அனிதா (40), தங்கமலை (33), பஞ்சவர்ணம் (35), மகாதேவி (50), தமிழ்ச்செல்வி (55) ஆகியோர் பலியாகினர். பாக்கியம் (35), பாலமுருகன் (30), முனீஸ்வரி (32), குருவம்மாள் (55) ஆகியோரும் பட்டாசு விபத்தில் உயிரிழந்தனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
