×

பந்துவீச்சு பற்றி பும்ராவிடம் இருந்து கத்துக்கோப்பா…: ஷாகின் அப்ரிடிக்கு அக்ரம் அட்வைஸ்

அகமதாபாத்:உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது. பவுலர்களின் செயல்பாடுகளும் சுமாராகவே இருந்தது.
குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர பவுலர் ஷாகின் அப்ரிடி 3 போட்டிகளில் ஆடி 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். மேலும் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல்திணறி வருகிறார். இதுகுறித்து பாகிஸ்தான் மாஜி வீரர் வாசிம் அக்ரம் கூறுகையில், ஷாகின் அப்ரிடி பிட்னஸில் ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது பந்துவீச்சில் ஒழுக்கம் தான் மிஸ் ஆகிறது. விக்கெட்டுக்காக அதிகமாக முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறையும் யார்க்கரை மட்டுமே வீச முயற்சிப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

அப்படி யார்க்கரை வீச முயற்சிக்கும் போது பேட்ஸ்மேன்கள் தயாராக இருப்பார்கள். இந்திய அணியின் பும்ரா ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு முயற்சிக்காமல், அழுத்தத்தை அதிகரிக்கிறார். சரியான ஆப் ஸ்டம்புக்கு மேல் தனது லைனை வைத்திருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷாவை அந்த அணி அதிகமாக மிஸ் செய்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நசீம் ஷா ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்காமல் பந்துவீசி அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவர். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களால் அடிப்படைகளை கூட சரியாக பின்பற்ற முடியவில்லை. அதுதான் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சொதப்புவதற்கு காரணம் என்றார்.

 

The post பந்துவீச்சு பற்றி பும்ராவிடம் இருந்து கத்துக்கோப்பா…: ஷாகின் அப்ரிடிக்கு அக்ரம் அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Akram ,Shakin Afridi ,AHMEDABAD ,World Cup ,Indian ,Pakistan ,Dinakaran ,
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு