சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஞ்சர் ஒட்டும் போது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. பல அடி தூரம் உயரே லாரி டயர் பறந்து சென்றது. டயர் கீழே விழுந்ததில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நபர் சங்ககிரி அருகே ஆலத்தூர் ரெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்தவர்.
இவர் நேற்று தனது வாகனத்தை நிறுத்துவதற்காக அங்கு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மற்றொருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோகன சுந்தரம் என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்த பஞ்சர் கடையில் டயர் பஞ்சர் போட்டு கொண்டு காத்து அடித்து கொண்டிருந்தார். அப்பொழுது லாரி டயரில் அதிகமாக காற்று நிரம்பியதால் டயர் வெடித்து சிதறியது.
இதில் வெடித்து சிதறியது இதில் பறந்து சென்ற லாரியின் டயர் அங்கே மோகன சுந்தரத்தை காப்பாற்ற ஓடி வந்த ராஜ்குமார் என்பவர் மீது டயர் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஞ்சர் கடையில் டயர் வெடித்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
