×

பெண் அமைச்சரின் புகார் மீது தேசிய பெண்கள் ஆணையம் விசாரிக்க உள்துறை உத்தரவிட வேண்டும்

புதுச்சேரி, அக். 17: பெண் அமைச்சரின் புகார் மீது தேசிய பெண்கள் ஆணையம் விசாரிக்க உத்தரவிடக்கோரி உள்துறை அமைச்சருக்கு, புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் பெண் அமைச்சராக பணியாற்றி வந்த சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கும் விஷயம் மிகவும் அதிர்ச்சிக்குரியது. சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் பெரும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், ஆணாதிக்க கும்பலின் அரசியல் சூழ்ச்சிகளால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் அமைச்சருக்கே புதுச்சேரி மாநிலத்தில் பாதுகாப்பில்லாத நிலையை ஆணாதிக்க சக்திகள் உருவாக்கி உள்ளன. பெண் அமைச்சரை ஜாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தவோ, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவோ, புதுச்சேரியை ஆளும் என்ஆர். காங்கிரஸ் முதல்வர், துணை நிலை ஆளுநரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெண் அமைச்சர் புகாரின் அடிப்படையில் ஜாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் அவருக்கு துன்புறுத்தல் கொடுத்தவர்கள் யார்? என்பதை கண்டறிய தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

The post பெண் அமைச்சரின் புகார் மீது தேசிய பெண்கள் ஆணையம் விசாரிக்க உள்துறை உத்தரவிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Puducherry ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...