×

வீட்டு வசதி, விவசாயம் உள்ளிட்ட 7 துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமைச்செயலாளர் உத்தரவு

சென்னை: தலைமைச் செயலாளர் சிவாதஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராகவும், வீட்டு வசதி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா, வேளாண் பாதுகாப்பு ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளராகவும், அந்த துறையின் செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜிலன்ஸ் ஆணையராக உள்ள கோபால், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராகவும், கைவினைத்துறை நிர்வாக இயக்குநராக இருந்த சோபனா, எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராகவும், பெருநகர சென்னை பெருநகர வளர்ச்சித்துறை சிறப்பு அதிகாரியாக இருந்த கவிதா ராமு, கைவினைப் பொருட்கள் கழக நிர்வாக இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post வீட்டு வசதி, விவசாயம் உள்ளிட்ட 7 துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமைச்செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IAS ,Chennai ,Chief Secretary ,Sivadas Meena ,Cooperatives, Food and Consumer Protection Department ,Jaganathan ,Commercial Tax Department ,Dinakaran ,
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை