×

வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டியில் அய்யனார் கோயில் உற்சவ திருவிழா

வாடிப்பட்டி, அக். 14: வாடிப்பட்டி அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் உற்சவ விழா நடைபெறும். அதன்படி நேற்று புரட்டாசி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக போடிநாயக்கன்பட்டி மந்தையில் உள்ள அய்யனார் பீடம் மற்றும் முத்தாலம்மன் கோயில் வளாகத்திலிருந்து காவல் தெய்வம் கருப்புசாமி உருவபொம்மை, லாடசன்னாசி, கன்னிமார்கள், குதிரைகள், நேர்த்திகடனுக்கு செய்யப்பட்ட குழந்தை, கால், கை, ஆகிய உருவபொம்மைகளை ஏராளமான பக்தர்கள் மேளாதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துசென்றனர்.

போடிநாயக்கன்பட்டியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள விராலிப்பட்டி சிறுமலை அடிவார கண்மாய் கரையில் உள்ள கடவுகாத்த அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்ற பின் அங்குள்ள அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை போடிநாயக்கன்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.

The post வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டியில் அய்யனார் கோயில் உற்சவ திருவிழா appeared first on Dinakaran.

Tags : Ayyanar Temple Utsava festival ,Vadipatti ,Bodhinayakanpatti ,Purattasi ,Kadavu Katha Ayyanar Temple ,Bodinayakanpatti ,Ayyanar Temple Utsava Festival in ,Vaadipatti ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது