×

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேர் விடுதலை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேர் விடுதலை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. பணகுடியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிகளில் நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் 9 ஆயுள் சிறை கைதிகளையே விடுதலை செய்வதாக சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 113-வது பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முன்விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் சிறை கைதிகள் 9 பேரும் பணகுடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு நெல்லை அமர்வு நீதிமன்றத்தால் 1999-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு 14 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்ததுள்ளது. அண்ணல் பிறந்தநாளை ஒட்டி இதுவரை 344 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேர் விடுதலை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anna ,Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,Panagudi ,Mahatma Gandhi ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு