×

மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகத்திற்கு உலகளாவிய வடிவமைப்பு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், எம்பாசிஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் செப். 28ல் டெல்லியில் நடைபெற்ற ‘உலகளாவிய வடிவமைப்பு’ விருதுகள் 2023 நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் ‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

“அனைத்தும் சாத்தியம்” என்ற அருங்காட்சியகமானது மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அங்கு வருகை புரிபவர்களுக்கு அவர்கள் தனிச்சையாக வாழ்வதற்கு ஏதுவாக காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய இல்லம், வேலை செய்யும் இடத்தில் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு ஓய்வு நேரங்களில் பயன்படுத்தும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்திற்கு புதுதில்லியில் 28.09.2023 அன்று எம்பாசிஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் “உலகளாவிய வடிவமைப்பு” விருதுகள் 2023 நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதினை, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பாளர்களுடன் பெற்றுக்கொண்டார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகத்திற்கு உலகளாவிய வடிவமைப்பு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Global Design Awards ,All is Possible' museum for ,Chief Minister ,M K Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Secretariat ,Empasis ,National Center for Development of Employment of Persons with Disabilities ,Everything is Possible' Museum for Persons with Disabilities ,M.K.Stalin ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...