கோவை, அக். 10: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார்.
எனவே, மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.
