×

நலத்திட்ட உதவிகள் பெற பதிவு செய்யும் முகாம்: நகராட்சி ஆணையர் தகவல்

 

காரைக்குடி, அக்.9: காரைக்குடி நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விவரங்கள் பதிவு செய்யும் முகாம் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை நடக்கவுள்ளது என ஆணையர் வீரமுத்துக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, காரைக்குடி நகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளாக பதிவு செய்து வங்கிகள் மூலம் கடன் தொகை பெற்றவர்கள் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விவரங்கள் பதிவு செய்யும் முகாம் நடத்தப்பட உள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. எனவே சாலையோர வியாபாரிகள் வங்கியில் கடன் தொகை பெற்றவர்கள் மட்டும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு மற்றும் ரேசன் கார்டு போன்ற ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

The post நலத்திட்ட உதவிகள் பெற பதிவு செய்யும் முகாம்: நகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Registration ,Karaikudi ,Karaikudi Municipality ,Dinakaran ,
× RELATED கூட்டு மதிப்பு நடைமுறை குறித்து தவறான...