×

தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன் போனஸ் வழங்க வேண்டும்: பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

 

திருப்பூர், அக்.7: திருப்பூர் பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் காசிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பனியன் தொழிற்சாலை சார்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும். மேலும், தொழிலாளார்களுக்கான 4 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன் போனஸ் வழங்க வேண்டும்: பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Banyan Labor Development Association ,Tirupur ,Tirupur Banyan Labor Progress Association ,Diwali ,Banyan Labor Progress Association ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்