×

திரையரங்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த இஎஸ்ஐ தொகை ரூ.37 லட்சத்தை செலுத்த முடியுமா?: நடிகை ஜெயப்பிரதா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு


சென்னை: நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ஜெயப்பிரதா ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தது. இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஒரு வாரத்தில் இந்த மனுவுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் பதில் தர வேண்டும். இடைப்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முடியுமா என்று ஜெயப்பிரதா தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post திரையரங்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த இஎஸ்ஐ தொகை ரூ.37 லட்சத்தை செலுத்த முடியுமா?: நடிகை ஜெயப்பிரதா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ESI ,Jayapratha ,Chennai ,Yumana Jayapratha ,Anna Road ,Ram Kumar ,Rajbabu ,
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்