திருத்தணி, அக். 5: திருத்தணி மா.பொ.சி சாலையில் அசோக்குமார் என்பவர் தங்க நகை கடை நடத்தி கொண்டிருந்தார். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பார் மாதம் 23ம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். திருமணத்திற்கு தாலி செயின் வேண்டும் என்றும் தாலி சரடு புது ரகங்கள் காட்ட கேட்டுள்ளார். கடைக்காரர் 4 விதமான மாடல்களில் செயின் காட்டியுள்ளார். கையில் தங்க நகைகள் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, நகைகளுடன் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்து சாலையில் தயார் நிலையில் இருந்த மற்றொரு பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிட்டு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அசோக்குமாரின் அண்ணன் மகன் நிக்கில்குமார் திருத்தணி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடை மற்றும் சாலை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரணை நடத்தினர். இதில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி கரகங்கடாபுரம் சேர்ந்த சிக்கிந்தர்(30), சத்தரவாடா சேர்ந்த கங்காதரன்(25) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வழக்கு திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முத்துராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் நேற்றுமுன்தினம் இரண்டாண்டு சிறை தண்டனையும் தலா ₹2,500 வீதம் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post நகைகள் வாங்குவது போல் நடித்து கொள்ளை வாலிபர்கள் இருவருக்கு 2 ஆண்டு சிறை: திருத்தணி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.