×

கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நெல்லை: 2004ம் ஆண்டு நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சிவா, தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் இறந்த நிலையில், மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

The post கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnasami ,Tamil Nadu Party ,Three ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!