×

திருப்பதியில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் ரத்து

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. எனவே வரும் 6, 7, 8 மற்றும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் இந்த நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக வரிசையில் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். எனவே பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து பொறுமையாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதியில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் ரத்து appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Devasthanam ,Swami ,Puratasi ,Tirupati Eyumalayan ,
× RELATED திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ஆடை...