×
Saravana Stores

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடும் அமல்: தினமும் திலகம், குங்குமம், விபூதி வைக்க உத்தரவு

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தினமும் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைக்க வேண்டும், சனிக்கிழமைகளில் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான இணைசெயல் அதிகாரி வீரபிரம்மம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வரவேண்டும். தினமும் அனைத்து ஆண் ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும். அதேபோல் பெண் ஊழியர்கள் இந்துக்களின் புடவை, ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும்.

அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரையொருவர் மற்றும் பிறரை சந்திக்கும் போதெல்லாம் ‘கோவிந்தா’ அல்லது ‘ஓம் நமோ வெங்கடேசாயா’ என்று கூறி பின்னர் பேச தொடங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடும் அமல்: தினமும் திலகம், குங்குமம், விபூதி வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tirupati Devasthanam ,Tirumala ,Tirupati Devasthan ,Co- ,Operation Officer ,Veerabramham ,Tirupathi Devasthan ,
× RELATED ஏழுமலையான் கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு