×

தங்க மங்கையர்

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தடகளத்தில் நேற்று 2 இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மகளிர் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற பாருல் சவுதாரி 15 நிமிடம், 14.75 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். ஜப்பான் வீராங்கனை ஹிரோனகா ரிரிகா (15:15.34) வெள்ளிப் பதக்கமும், கஜகஸ்தானின் கரோலின் செப்கோயச் (15:23.12) வெண்கலமும் வென்றனர். பாருல் சவுதாரி நேற்று முன்தினம் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஈட்டி எறிதலில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீட்டர் தூரத்துக்கு எறிந்து தங்கம் வென்றார். இலங்கையின் நதீஷா தில்ஹான் (61.57 மீ.) வெள்ளியும், சீனாவின் லியு ஹுய்ஹுய் (61.29 மீ.) வெண்கலமும் வென்றனர். தங்கப் பதக்கங்களை வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த பாருல் சவுதாரி, அன்னு ராணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

The post தங்க மங்கையர் appeared first on Dinakaran.

Tags : Thanga Mangaiyar ,Asian Games ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...