×

ஒரு வாரத்தில் மாநில கல்வி கொள்கை இறுதி அறிக்கை: அதிகாரிகள் தகவல்

சென்னை: மாநில கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கையை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்த நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் கல்வி கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டன.

இது தொடர்பாக இறுதி அறிக்கைக்கு குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்கும், அவர்களின் ஆலோசனைகளை கேட்பதற்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. மாநில கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கைக்கு குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

அந்த வகையில் தயார் நிலையில் இருக்கும் மாநில கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கையை தமிழ் மொழியில் பெயர்க்கும் பணி நடந்து வந்தது. கடந்த மாதம் இறுதிக்குள் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இந்த மாநிலக் கல்விக்கொள்கை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது என குழுவில் உள்ள அதிகாரிகள் ெதரிவித்தனர்.

The post ஒரு வாரத்தில் மாநில கல்வி கொள்கை இறுதி அறிக்கை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...