×

50% மட்டும் வருகை பதிவு பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்: தேசிய மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: நாட்டில் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில், சம்பள பட்டியலில் மட்டும் இருக்கும் போலி ஆசிரியர்கள் உள்ளதாக தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்த விதிமுறைகளின் கீழ் புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 23 வெளியிடப்பட்ட வரைவில், இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 14 துறைகளில் அவசர மருத்துவத் துறையும் ஒன்றாகும்.

இது தொடர்பான இந்திய அவசர கால மருத்துவர்கள் கூட்டமைப்பின் கேள்விகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் அளித்த பதிலில், “நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் 2022-23ம் ஆண்டில் நடத்திய மதிப்பீட்டின் போது போலி ஆசிரியர்கள் மற்றும் உறைவிட மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பள பட்டியலில் மட்டுமே அவர்களின் பெயர் உள்ளது. ஆனால் அவர்கள் பணிக்கு வருவதில்லை. இன்னும் சில மருத்துவ கல்லூரிகளில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளது. மேலும், 2 மாத வேலை நாட்களின் வருகைப் பதிவை ரேண்டமாக ஆய்வு செய்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய போதுமான கால அவகாசம் வழங்கி எச்சரித்த பிறகும் கூட எந்த மருத்துவ கல்லூரியும் 50 சதவீத வருகை தேவையை பூர்த்தி செய்யவில்லை,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “அவர்களில் யாரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரவில்லை. ஏனெனில் அவசர மருத்துவத் துறையில் விபத்து மருத்துவ அதிகாரியைத் தவிர தொடர்பு கொள்ள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என யாரும் கிடையாது,“ என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

The post 50% மட்டும் வருகை பதிவு பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்: தேசிய மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : National Medical Council ,New Delhi ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...