×

மகளிருக்கு இடஒதுக்கீடு சட்டமானதால் லிப்ஸ்டிக், பாப் கட்டிங்கில் அவைக்கு வருவார்கள்: லாலு கட்சி தலைவர் சர்ச்சை கருத்து

முசாபர்பூர்: மகளிர் இடஒதுக்கீடு சட்டமானதால் இனிமேல் பெண்கள் லிப்ஸ்டிக், பாப் கட்டிங்கில் அவைக்கு வருவார்கள் என்று லாலு கட்சி மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக் கூறினார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் பீகாரில் லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திக் என்பவர் மகளிர் இடஒதுக்கீடு குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்து உள்ளார்.

முசாபர்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ‘இடஒதுக்கீட்டை பெண்கள் பெற்றுள்ளதால், இனிமேல் அவர்கள் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூசிக் கொண்டும், ‘பாப் கட்டிங்’ செய்து கொண்டும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு வருவார்கள். அவர்களால் ஏதாவது நன்மை உண்டா? மகளிர் இடஒதுக்கீட்டை உண்மையில் பெண்களுக்கு கொடுக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு அளிக்க வேண்டும்’ என்றார். அவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

The post மகளிருக்கு இடஒதுக்கீடு சட்டமானதால் லிப்ஸ்டிக், பாப் கட்டிங்கில் அவைக்கு வருவார்கள்: லாலு கட்சி தலைவர் சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.

Tags : Lalu party ,Muzaffarpur ,
× RELATED லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1...