×

மாநகராட்சி உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

 

கோவை, செப். 30: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், வருவாய் பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த செந்தில்குமார் ரத்தினம் இடமாற்றம் செய்யப்பட்டு, சேலம் மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், நிர்வாக பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தெற்கு மண்டல நிர்வாக அலுவலர் மற்றும் மாமன்ற செயலர் பொறுப்புகளை கவனித்து வரும் மாணிக்கத்துக்கு கூடுதலாக உதவி கமிஷனர் (நிர்வாகம்) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கணக்கு அலுவலராக பணிபுரியும் தமிழ்வேந்தனுக்கு கூடுதலாக உதவி கமிஷனர் (வருவாய்) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் பிறப்பித்துள்ளார்.

The post மாநகராட்சி உதவி கமிஷனர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Godai ,Assistant Commissions ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...