×

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்

சென்னை: எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்? எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin Devitt ,Chennai ,AIIMS ,Tamil ,Nadu ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...