×

பசுக்களை இறைச்சிக்காக விற்பதாக புகார் மேனகாவிடம் ரூ.100 கோடி கேட்டு இஸ்கான் வழக்கு

கொல்கத்தா: இஸ்கான் அமைப்பு பசுக்களை இறைச்சிக்கு விற்பதாக குற்றம் சாட்டிய மேனகா காந்தி மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பசுக் கூடங்களை பராமரித்து வரும் இஸ்கான் அமைப்பு பசுக்களை இறைச்சிக்காக விற்பனை செய்வதாக விலங்குகள் ஆர்வலரும் பாஜ எம்பி.யுமான மேனகா காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்கான், மேனகா மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்கான் அமைப்பின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறிய மேனகா காந்திக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரது குற்றச்சாட்டுகளால் இஸ்கான் அமைப்பின் பக்தர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்,” என்று கூறப்பட்டுள்ளது.

The post பசுக்களை இறைச்சிக்காக விற்பதாக புகார் மேனகாவிடம் ரூ.100 கோடி கேட்டு இஸ்கான் வழக்கு appeared first on Dinakaran.

Tags : ISKCON ,Maneka ,Kolkata ,Maneka Gandhi ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...